ஈரானை “கற்காலத்திற்கு” தள்ளுவோம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானை “கற்காலத்திற்கு” தள்ளுவோம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் “முழுமையடையும் தருவாயில்” உள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரும் வாரங்களில் அந்தப் பணிகள் நிறைவு செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

வொஷிங்டனில் இருந்து இன்று (02) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த 2-3 வாரங்களுக்குள் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மீதும் மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

இந்த பாரிய தாக்குதல்களின் மூலம் ஈரானை மீண்டும் “கற்காலத்திற்கு” பின்னோக்கித் தள்ளப்போவதாக அவர் எச்சரித்தார்.
அமெரிக்கா திட்டமிட்ட பல இராணுவ இலக்குகள் ஏற்கனவே வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதாகவும்,
அந்தப் பணிகளை முடிப்பதற்கு இன்னும் மிகக் குறுகிய காலமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் முயற்சிகள் மற்றும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த உரையை நிகழ்த்தினார். ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்கு வராவிட்டால்,

அந்நாட்டின் உட்கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படும் என ட்ரம்ப் இதன்போது கடுமையாகத் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )