ஏர்பஸ் கொள்வனவு கையூட்டு விவகாரம் ; இருவருக்கு திறந்த பிடியாணை

ஏர்பஸ் கொள்வனவு கையூட்டு விவகாரம் ; இருவருக்கு திறந்த பிடியாணை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் வானூர்தி கொள்வனவு தொடர்பாக இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டு மற்றும் நிதி முறைகேடு சம்பவம் குறித்து, சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இருவரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )