
கொழும்பு மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நீர்விநியோகம் ; நீர்வெட்டு அட்டவணை வெளியீடு
நிலவும் வறட்சியான காலநிலையை முன்னிட்டு, கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் திட்டமிட்ட நீர் விநியோகத் தடைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அட்டவணை:
பாதுக்க – ஏப்ரல் 2 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை
ஹோமாகம – ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை
பெலன்வத்தை – ஏப்ரல் 4 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை
மேற்கண்ட பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இத்தகைய நீர்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் இடைநாட்களில் வழக்கம்போல் நீர் விநியோகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கட்ட நீர்வெட்டு அட்டவணையின் படி:
பாதுக்க – ஏப்ரல் 7
ஹோமாகம – ஏப்ரல் 8
பெலன்வத்தை – ஏப்ரல் 9
என மீண்டும் நீர்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

