மேலும் இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டிவீழ்த்தியதாக கூறும் ஈரான்                                                       அவற்றை தானே அழித்ததாக கூறும் அமெரிக்கா

மேலும் இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டிவீழ்த்தியதாக கூறும் ஈரான் அவற்றை தானே அழித்ததாக கூறும் அமெரிக்கா

ஈரான் தனது எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் சிதைவுகளைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய ஆதாரங்களின்படி, ஒரு C-130 ஹெர்குலஸ் (C-130 Hercules) விமானம் மற்றும் ஒரு UH-60 பிளாக் ஹாக் (UH-60 Black Hawk) ஹெலிகாப்டர் ஆகியவை உள்ளதங்குவதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் போர் விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் இவை ஈடுபட்டிருந்ததாக ஈரான் தெரிவிக்கிறது.
இதன்போது இந்த ஹாலிகாப்டர் மற்றும் விமானம் இரண்டும் தரையிறங்கியிருந்த போதே தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவிக்கின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க தரப்பு முற்றிலும் மாறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளது:
கமாண்டோக்களையும் ஈரான் ஏற்கனவே சுட்டு வீழ்த்திய போர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட விமானியையும் ஏற்றிச் செல்ல வந்த இரண்டு (MC-130J) போக்குவரத்து விமானங்கள், ஈரானின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு தளத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்ததாகவும்
இந்த நவீனத் தொழில்நுட்பங்கள் கொண்ட விமானங்கள் ஈரானிய இராணுவத்தின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்கத் தளபதிகள் அவற்றை அங்கேயே வைத்து வெடிக்கச் செய்ய உத்தரவிட்டதாகவும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் மேலதிக விமானங்கள் வரவழைக்கப்பட்டு, வீரர்களும் விமானியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முரண்பட்ட தகவல்கள் மற்றும் இராணுவ இழப்புகள் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தத்தமது கருத்துக்களில் உறுதியாக இருப்பதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )