
ஈரான் உயர் தலைவரின் அங்கீகாரத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம்எட்டப்பட்டதுபாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகள் வெற்றி
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுத்த முயற்சிகளால் எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை மெஹ்ர் செய்தி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஈரானின் புதியஉயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் நேரடி அங்கீகாரத்துடன் எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஈரானுக்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி” என இந்த உடன்படிக்கையைவர்ணித்துள்ள பாதுகாப்புச் சபை, தங்களது நிபந்தனைகள் மற்றும் போராட்டத்திற்கு மதிப்பளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக இதனை மாற்றுவதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்குச் ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் நிலவிய போர் அச்சம் தற்காலிகமாக நீங்கியுள்ளது.

