விஞ்ஞானத்தில் சுகாதார ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு இலங்கை முன்னிலை வகிக்கிறது

விஞ்ஞானத்தில் சுகாதார ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு இலங்கை முன்னிலை வகிக்கிறது

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய வலய அலுவலகத்தில் (WHO SEARO) நடைபெற்ற “2026 உலக சுகாதார தினம்” உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

விஞ்ஞானத்தில் சுகாதார ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு இலங்கை முன்னிலை வகிக்கிறது – சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ

” விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுதல் எனும் எமது நிறுவன மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு தொடர்பான நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும், விசேடமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதாரத் தகவல்களுக்கு எதிராக காணப்படும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும்” அமைச்சர் வலியுறுத்தினார்.

அதற்காக சுகாதார பணிக் குழுவிற்கு நீண்ட கால முதலீடொன்றை மேற்கொள்ளுதல் போன்ற ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்காக நீண்ட கால ஒத்துழைப்பு அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், . விஞ்ஞானத்தினால் அடையப்பட்ட சாதனைகளை, நலிவடைந்த மக்களுக்கு, குறிப்பாக நலிவடைந்த மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் இலட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )