
900 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி
சர்வதேச கால்பந்து போட்டிகளில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் கீழ் நடைபெறும் கான்காகேஃப் சாம்பியன்ஸ் கோப்பை (Concacaf Champions Cup) தொடரின் நடப்பு சீசனில், நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இன்டர் மியாமி அணி,, நேஷ்வில் எஸ்சி அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியின் 7வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்தார். எனினும், இரு அணிகளும் சம அளவில் விளையாடியதால், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இந்த கோலின் மூலம், அதிகாரப்பூர்வ கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்த இரண்டாவது வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், குறைந்த போட்டிகளில் 900 கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ 965 கோல்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

