
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா (Manara) குடியிருப்புப் பகுதிகள் மீது இன்று (09) அதிகாலை ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து டெலிகிராம் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் அந்த அமைப்பு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது,
“எமது நாட்டிற்கும் எமது மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய – அமெரிக்க ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரை, இந்தத் தாக்குதல்கள் தொடரும்.” என கூறியுள்ளது .
இதேவேளை, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஒரு ரொக்கெட் தாக்குதலை நடுவானிலேயே அழித்துவிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

