”தேவைப்படும்போது கிரீன்லாந்து எம்மோடு இருக்கவில்லை””கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்” – டிரம்ப் அச்சுறுத்தல்

”தேவைப்படும்போது கிரீன்லாந்து எம்மோடு இருக்கவில்லை””கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்” – டிரம்ப் அச்சுறுத்தல்

நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே (Mark Rutte) உடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேட்டோ அமைப்பை கடுமையாகச் சாடியுள்ளதுடன், கிரீன்லாந்து தொடர்பான தனது அச்சுறுத்தல்களையும் மீண்டும் விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் சாத்தியக்கூறுகள் குறித்து ட்ரம்ப் விவாதித்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிரான போரில் நேட்டோ நட்பு நாடுகள் தனக்கு ஆதரவளிக்காத காரணத்தினால் ட்ரம்ப் கடும் கோபத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக சுமார் எண்பது ஆண்டுகள் பழமையான இந்த பாதுகாப்பு கூட்டணியில் இருந்து அமெரிக்கா விலகக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்திப்பிற்குப் பிறகு தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் பின்வருமாறு கூறியுள்ளார்:

“எங்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் நேட்டோ எங்களுடன் இருக்கவில்லை. எங்களுக்கு அவர்கள் மீண்டும் தேவைப்படும்போது எங்களுக்காக
இருக்கப் போவதில்லை. பலவீனமான ஆட்சியைக் கொண்ட ஒரு பெரிய பனிப்பாறை போன்ற கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்!!!”

ஈரான் போருக்கு முன்பே, டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவது தொடர்பாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல், நேட்டோ கூட்டணிக்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையை ரஷ்யாவும் சீனாவும் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வருவதாகவும், அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறுவது அவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியாக அமையும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )