சாதாரண தர (O/L) அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை ஏப்ரல் 22 முதல் மே 04 வரை இணையதளத்தில் அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்யலாம்

சாதாரண தர (O/L) அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை ஏப்ரல் 22 முதல் மே 04 வரை இணையதளத்தில் அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்யலாம்

2025(2026) கல்வியாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் 2026 ஏப்ரல் 22 முதல் மே 04 வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் உள்ள 1,198 பரீட்சை மத்திய நிலையங்களில் 162,587 விண்ணப்பதாரர்களுக்காக இந்தச் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

மேலைத்தேய சங்கீதம் (பாடம் 41): இதற்கான கேட்டல் பரீட்சை 2026 ஏப்ரல் 26 அன்று அந்தந்த செய்முறைப் பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.

உள்ளடக்கப்படும் பாடங்கள்,

40 – சங்கீதம் (கீழ்த்தேயம்)

42 – சங்கீதம் (கர்நாடகம்)

44 – நடனம் (தேசிய)

45 – நடனம் (பரதம்)

50 – நாடகமும் அரங்கியலும் (சிங்களம்)

51 – நாடகமும் அரங்கியலும் (தமிழ்)

52 – நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்)

41 – சங்கீதம் (மேலைத்தேயம்)

அழகியல் பாடங்களின் இறுதி முடிவுகளைத் தீர்மானிக்க எழுத்துப் பரீட்சை மற்றும் செய்முறைப் பரீட்சை ஆகிய இரண்டுமே அவசியமாகும். எனவே, இரண்டு பகுதிகளுக்கும் தோற்றாத விண்ணப்பதாரர்களுக்கு அந்தப் பாடத்திற்கான முடிவுகள் (Results) வழங்கப்படமாட்டாது என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் அந்தந்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இன்று (ஏப்ரல் 10) முதல் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாக அனுமதி அட்டைகளைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அனுமதி அட்டைகளில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் தேவையிருப்பின், உடனடியாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )