ஏப்ரல் 10 முதல் 19 வரை விசேட ரயில் சேவைகள்

ஏப்ரல் 10 முதல் 19 வரை விசேட ரயில் சேவைகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 10 முதல் 19 வரை குறிப்பிட்ட திகதிகளில் கொழும்பிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இந்த விசேட சேவைகள் முன்னெடுக்கப்படும்.

விசேட புகையிரத சேவைகள்,
அனுராதபுர வழித்தடம் – கொழும்பு கோட்டை மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலும், காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலும் காலையில் விசேட ரயில்கள் இயக்கப்படும். மீண்டும் திரும்பும் சேவைகளும் அதே காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும்.

தெற்கு வழித்தடம் – மருதானை – மாத்தறை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய நகரங்களுக்கு இடையே ஏப்ரல் 10, 11, 12, 15 மற்றும் 18 ஆகிய திகதிகளில் விசேட புகையிரதங்கள் இயக்கப்படும். மாத்தறை மற்றும் பெலியத்தவிலிருந்து மருதானைக்கான திரும்பு திசை சேவைகளும் இதில் அடங்கும்.

ரஜரட்ட ரெஜினா – பெலியத்த மற்றும் மஹவ இடையே இயங்கி வந்த ரஜரட்ட ரெஜினா ரயில் , ஏப்ரல் 9 முதல் அனுராதபுரம் வரை தினசரி நீடிக்கப்பட்டுள்ளது.

மஹவ அலுவலக புகையிரதம் – கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் மஹவ அலுவலக புகையிரதம் ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதியைக் கருத்திற்கொண்டு இந்த விசேட புகையிரதங்களில் சில முதலாம் வகுப்பு ஆசன முன்பதிவு பெட்டிகளைக் கொண்டிருக்கும்.

மேலதிக நேர அட்டவணைகளை இலங்கை புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )