நெதன்யாகுவால் இராஜதந்திரம்அழிய அமெரிக்கா அனுமதிக்கக் கூடாது –  அப்பாஸ் அரக்சி

நெதன்யாகுவால் இராஜதந்திரம்அழிய அமெரிக்கா அனுமதிக்கக் கூடாது – அப்பாஸ் அரக்சி

இஸ்ரேல் பிராந்திய போர்நிறுத்தத்தை சீர்குலைப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் பிராந்தியத்தியத்தில் அமைதி சீர்குலைவது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் .

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே போரை நீட்டிக்கிறார் என்று அரக்சி சாடியுள்ளார். ” இராஜதந்திரத்தைக் அழிக்க அமெரிக்கா நெதன்யாகுவிற்கு இடமளிப்பது முட்டாள்தனமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதலால் அமெரிக்கா தனது பொருளாதாரத்தைச் சிதைக்க விரும்பினால் அது அவர்களின் விருப்பம், ஆனால் ஈரான் எதற்கும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்ற அமெரிக்காவின் வாதத்தை ஈரான் நிராகரித்துள்ளது.

லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் ஹோமுஸ் நீரிணையை முடக்குவது அல்லது இராணுவ ரீதியாகப் பதிலடி கொடுப்பது குறித்து ஈரான் ஆலோசித்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நெதன்யாகுவிடம் தாக்குதல்களைக் குறைக்குமாறு கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், களத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறையவில்லை.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பெய்ரூட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

பெப்ரவரி 28 அன்று ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் தொடக்கத்தில் இந்த மோதல் முழு அளவிலான போராக மாறியது .

இஸ்ரேல் தனது “சுட்டெரிக்கப்பட்ட பூமி” கொள்கையை காஸாவிற்குப் பிறகு இப்போது தெற்கு லெபனானிலும் செயல்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )