யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 12 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் ஒரு மீன்பிடிப் படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலம் பகுதிக்கு அப்பாலுள்ள கடல் பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்றுமுன்தினம்இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

வட கடற்படை கட்டளையகம் முன்னெடுத்த ரோந்துப் பணியின் போது, பல இந்தியப் படகுகள் அத்துமீறி மீன்பிடிப்பது அவதானிக்கப்பட்டது.

அவற்றைத் துரத்திவிடும் நடவடிக்கையின் போது, தொடர்ந்து இலங்கை எல்லைக்குள் நின்ற ஒரு படகை கடற்படையினர் சோதனையிட்டு மீனவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களது படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடல் எல்லை விவகாரம் மற்றும் மீனவர் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடரும் நிலையில், இந்தப் புதிய கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )