சீனா ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கினால்இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும்- டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

சீனா ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கினால்இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும்- டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க நேரப்படி நேற்று (ஏப்ரல் 12) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீனா ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கினால், அவர்கள் 50 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் நேரடியாக எச்சரித்துள்ளார்.

அத்தகைய திட்டங்கள் இருப்பதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், சீனா அவ்வாறு செய்யாது என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா ஈரானுக்கு ‘தோள்பட்டை ஏவுகணைகள்’ (Shoulder Missiles) மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கக்கூடும் என தகவல்கள் கிடைத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

குறிப்பாக, MANPADS (Man-Portable Air-Defense Systems) எனப்படும் தோளில் வைத்து ஏவக்கூடிய விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை ஈரானுக்கு வழங்க சீனா தயாராகி வருவதாக அவர் அந்தச் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சீனா களமிறங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கடுமையான பொருளாதார எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )