
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை
பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது பயணச் சீட்டுகளை வழங்க மறுக்கும் நடத்துனர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இத்தகைய அசௌகரியங்களுக்கு பயணிகள் முகங்கொடுத்தால், 1955 என்ற 24 மணிநேர சேவை அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தங்களது முறைப்பாடுகளை நேரடியாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 24 மணிநேரமும் முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

