பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த குறைபாடுகளுக்கு 1977 இற்கு அழையுங்கள்

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த குறைபாடுகளுக்கு 1977 இற்கு அழையுங்கள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய சம்பவங்கள் தொடர்பில் சுமார் 2000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பண்டிகைக் காலத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டங்களை நாம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவோம். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பாக விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், சந்தையில் நுகர்வோரை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குதல் மற்றும் நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எமது அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.”

சந்தையில் நுகர்வோர் ஏதேனும் அநீதிக்கு அல்லது பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தால், அது குறித்து அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்க முடியும்..

24 மணிநேர தொலைபேசி இலக்கம் – 1977

இந்த இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குவதன் மூலம், அதிகாரிகள் அது தொடர்பான தேவையான தலையீடுகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )