சர்வதேச அமைதி ஊர்வலம் இன்று ஆரம்பம் ; பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட தேரர்கள் இலங்கை வருகை

சர்வதேச அமைதி ஊர்வலம் இன்று ஆரம்பம் ; பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட தேரர்கள் இலங்கை வருகை

சர்வதேச அமைதி ஊர்வலத்தில் பங்கேற்கும் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட தேரர்கள் இன்று (21) அதிகாலை இலங்கை வந்தடைந்தனர்.

அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறும் இந்த சர்வதேச அமைதி ஊர்வலம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலக அமைதியை வலியுறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக, “அமைதியின் செல்லப்பிராணி” என அழைக்கப்படும் “ஆலோகா”வும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நலன்புரி சேவைகளை உறுதிப்படுத்துவதற்காக விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊர்வலம் நாடு முழுவதும் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )