நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 396 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 396 பேர் கைது

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (20) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 396 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 25,683 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 191 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 91 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )