அஸ்வெசும ; மார்ச் மாதக் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும ; மார்ச் மாதக் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு இன்று (12) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக மொத்தம் 11,179,801,250 ரூபாவிற்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்காகவும் நாளை 2,350,530,000 ரூபாவிற்கும் அதிகமான நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )