
???? Breaking News : ஈராக் எண்ணெய் துறைமுக நடவடிக்கைகள் நிறுத்தம்
எண்ணெய் டேங்கர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னர் ஈராக் தனது எண்ணெய் துறைமுக நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஈராக்கிய துறைமுகங்களுக்கான பொது நிறுவனத்தின் தலைவர் ஃபர்ஹான் அல்-ஃபர்டோசி இதனை ஈராக் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து எண்ணெய் முனைய செயல்பாடுகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் வணிக துறைமுகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஸ்ரா மாகாணத்தில் அமைந்துள்ள உம் காசர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த இரண்டு கச்சா எண்ணெய் டேங்கர்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோக நிலைமைகள் குறித்து கவலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

