
தெதுறு ஓயாவில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
மஹவ – பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நேற்று (26) நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த நிலையில், வழியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

