வில்பத்து வழக்கு ; மேல்முறையீட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

வில்பத்து வழக்கு ; மேல்முறையீட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

வில்பத்து வனக் காப்பகப் பகுதிக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து மீள்குடியேற்றம் செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிப்பதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் இன்று (27) விலகியுள்ளார்.

இம்மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவராக இருந்த நீதிபதி ஏ. எச். எஸ். டி. நவாஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, குறித்த மேல்முறையீட்டு மனுவின் அடுத்த கட்ட விசாரணை புதிய அமர்வில் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )