
திஸ்ஸகுட்டியின் மேடைப் பேச்சுக்களால் மொட்டுக் கட்சிக்கு சங்கடம் எச்சரித்தார் சாகர
பொதுக் கூட்டங்களில் பேசும் பொது பொறுப்பற்றவயில் கருத்துக்கள் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தொலைபேசி மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திஸ்ஸகுட்டி ஆராச்சி வெளியிட்ட சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கட்சிக்குள் கடுமையான சங்கட நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
திஸ்ஸாகுட்டிஆராச்சியை கடுமையான எச்சரித்த மொட்டு கட்சி , அவரை நாளை கட்சி அலுவலகத்திற்கு அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை , சமீபத்தில் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய மொட்டு கட்சி முன்னாள் திஸ்ஸநாடாளுமன்ற உறுப்பினர் திசாகுட்டி ஆராச்சி,
“நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதியாகும் நாளில், நான் இந்த நாட்டின் அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதி.
நான் அவரது நெருங்கிய நண்பர்.
நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்பதற்காக எனக்கு இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள் என நான் அவரிடம் கேற்கமுடியாது .
தேர்தலின் போது அனுராதபுரம் மாவட்டத்தில் மொட்டு வெற்றி பெற்றால், அனுராதபுரம் மக்கள் உங்களை வெற்றிபெற செய்தனர் இப்போது நீங்கள் அனுராதபுர மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அவரிடம் போய் சொல்வேன் ”
என திஸ்ஸ குட்டி ஆராச்சி சமீபத்தில் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

