போதைப்பொருள் கடத்தல்காரர் குடு தமிழ் மூளை புற்றுநோயால்உயிரிழப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர் குடு தமிழ் மூளை புற்றுநோயால்உயிரிழப்பு

தென் பகுதியை மையமாகக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் மிகவும் வயதான நபராகக் கருதப்படும் தமிழ் அஜித் குமார அல்லது தெவுந்தர “குடு தமிழ்” மூளை புற்றுநோயால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவர் தடுப்புக் காவலில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் நோய் நிலைமையின் போது காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தமிழ் அஜித் குமார அல்லது குடு அஜித் நேற்று காலை காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முதுகெலும்பு வழியாக மூளைக்கு பரவிய மலக்குடலில் ஏற்பட்ட புற்றுநோயால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொலை வழக்கு ஒன்று தொடர்பாக குடு தமிழுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர் அந்த தண்டனையை எதிர்த்து குடு தமிழ் மேல்முறையீடு செய்தபோது ,கடந்த 23 ஆம் திகதி அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் மற்றுமொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )