
உடல்நலக் குறைவு காரணமாக ஹரக் கட்டா வைத்தியசாலையில் அனுமதி
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என அழைக்கப்படும் ஹரக் கட்டா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிற்று வலி காரணமாக அவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹரக் கட்டா நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

