
பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று அழிப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று (27) பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது.
பலபிட்டிய மற்றும் சிலாபம் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அழிப்பு நடவடிக்கை பலபிட்டிய நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண மற்றும் சிலாபம் நீதவான் ஹர்ஷ டி சில்வா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் சான்றுப் பொருட்களாக பாதுகாக்கப்பட்டிருந்த இப்போதைப்பொருட்கள், நீதிவான்களின் நேரடி மேற்பார்வையில் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

