விசைப்படகுடன் 10 மீனவர்கள் கைது

விசைப்படகுடன் 10 மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகொன்றும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களும் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (13) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களுடைய விசைப்படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகு ஆகியவை இலங்கை நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )