ஈரான் சிறுவர் பாடசாலை மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலுக்கு ‘இலக்கு தவறியதே’ காரணம் – முதற்கட்ட அறிக்கை

ஈரான் சிறுவர் பாடசாலை மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலுக்கு ‘இலக்கு தவறியதே’ காரணம் – முதற்கட்ட அறிக்கை

ஈரானில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை மீது அமெரிக்க ஏவுகணை தவறுதலாகத் தாக்கியதில் சுமார் 175 பேர் உயிரிழந்தனர்.

கடந்த பிப்ரவரி 28ஆம்திகதி , தெற்கு ஈரானிய நகரமான மினாப்பில் உள்ள ஒரு பாடசாலை மீது அமெரிக்காவின் டோமஹாக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

அந்தப்பாடசாலை ஒரு இராணுவ இலக்கு எனத் தவறாக அடையாளம் காணப்பட்டதே இதற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தவறான உளவுத்துறை தகவல்கள் காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆரம்பகட்ட அறிக்கை கூறுகிறது.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டிரம்ப், இந்த விசாரணை முடிவுகள் குறித்து தமக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை என்று கூறினார்.

அமெரிக்க அதிகாரிகள் இந்த விசாரணை முடிவுகளை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ட்ரம்ப் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )