போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் மூன்று நிபந்தனைகள் -ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் மூன்று நிபந்தனைகள் -ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்

தற்போதைய போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

அமைதியை நிலைநாட்ட சர்வதேச சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன ?

ஈரானிய ஆட்சியின் இறையாண்மை மற்றும் உரிமைகள் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போரினால் ஏற்பட்ட அழிவுகளுக்காக நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் நடக்காது என்பதற்கான நிலையான சர்வதேச பிணைகள் மற்றும் உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகள் ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )