அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தமாக ரூ. 3.087 பில்லியன் வழங்கப்பட உள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் அதே வயது பிரிவைச் சேர்ந்த மேலும் 72,525 பயனாளர்களுக்கு ரூ. 362.6 மில்லியன் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )