உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்ய முடியும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்ய முடியும்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்விசாரணைகள் தற்போது சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படுமென நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மட்டுமன்றி நாட்டில் இடம்பெற்றுள்ள சட்டவிரோதச் செயல்கள், ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )