மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் வீழ்ச்சி

மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் வீழ்ச்சி

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (22) மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 89.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்ததுள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.32 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

மசகு எண்ணெய்யைப் போன்றே இயற்கை எரிவாயுவின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது.

சந்தை தரவுகளின்படி, இதன் விலை 2.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )