இந்தியாவில் கைது செய்யப்பட்ட தினுஷா சதுரங்கவை விளக்கமறியல் வைக்க உத்தரவு

இந்தியாவில் கைது செய்யப்பட்ட தினுஷா சதுரங்கவை விளக்கமறியல் வைக்க உத்தரவு

இந்தியாவில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் தினுஷா சதுரங்கவை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

காவலில் இருந்த குறித்த நபரை கெசல்வத்த பொலிஸார் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், முன்னர் வழங்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து, மேலும் விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை மே 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )