
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் எரமினியாயா அழகியல் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏரமினியாய அழகியல் நிலையம் நேற்று (22) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி இசை மற்றும் நடனங்கள் தொடர்பாக லலித்த கலை உயர் டிப்ளோமா பாடநெறியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அழகியல் நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 70 நபர்கள் முதலாவது குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அவ்வாறே இந்தப் பாடநெறி யுடன் ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம் போன்ற விடயங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேநாயக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், தென் மாகாணப் பணிப்பாளர் சரத் கொடிகார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் / பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

