
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
வீரகட்டியாவில் உள்ள கசகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகே வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கல்லே பகுதியிலிருந்து வந்த வாடகைக் காரை சோதனை செய்தபோது, அதன் பின்புறத்தில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக நபரிடமிருந்து 14 கிலோ வெடிமருந்து, 240 ஜெலட் தடிகள், 350 கிலோ அம்மோனியா, 490 டெட்டனேட்டர்கள் மற்றும் 5600 அடி நீளமுள்ள வெடிமருந்துக் கம்பி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வீரகட்டியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

