தோனி வேண்டும் என்றே விலகியிருக்கிறாரா? காயம் மட்டும் காரணம் இல்லை?

தோனி வேண்டும் என்றே விலகியிருக்கிறாரா? காயம் மட்டும் காரணம் இல்லை?

ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து வந்தாலும், தற்போது வெற்றி பெற்று வருகிறது.

ஆனால், ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

அது தோனி எப்போது விளையாடுவார் என்பது தான்.

எம்.எஸ். தோனி, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஏனெனில் போட்டிக்கு முந்தைய நாள் வலைப்பயிற்சியில் தோனி ஈடுபட்டது இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.

ஆனால், ஏப்ரல் 23ம் ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் தோனி விளையாடவில்லை.

மேலும் அவர் அணியுடன் வான்கடே மைதானத்திற்கு கூட வரவில்லை. டக்அவுட்டிலும் அவரை பார்க்க முடியவில்லை.

பயிற்சியில் பங்கேற்கும் போதிலும், போட்டி நேரங்களில் மைதானத்திற்கு வராதது தொடர்பாக தோனியின் முடிவு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில்,
அதற்கான காரணம் ஃபிட்னஸ் மட்டுமல்ல என ஐபிஎல் வர்ணனையாளர் சைமன் டல் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தன்னிடம் இருக்கும் அதிக கவனத்தை குறைத்து, புதிய தலைமையின் கீழ் அணி சுதந்திரமாக செயல்படுவதற்காகவே தோனி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தனது தாக்கம் காரணமாக அணியின் புதிய தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தோனி உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, அணியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான நடவடிக்கையாக பார்க்கப்படுவதாக ஐபிஎல் வர்ணனையாளர் சைமன் டல் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )