மோதலை தடுக்கச் சென்ற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கத்தி குத்தில் உயிரிழப்பு                                                   வலஸ்முல்லயில் சம்பவம் – நாளை இறுதிச்சடங்குகள்

மோதலை தடுக்கச் சென்ற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கத்தி குத்தில் உயிரிழப்பு வலஸ்முல்லயில் சம்பவம் – நாளை இறுதிச்சடங்குகள்

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர் எனவும் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவர் தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற போலீஸ் சார்ஜன்ட் தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்த் தரப்பைச் சேர்ந்த ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த அவர் முதலில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையிலும், பின்னர் மாத்தறை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிச் சடங்குகள் நாளை (26) பொலிஸ் கௌரவ மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )