
போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடி ; 60 வயது நபர் கைது
போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலுமஹாரா பகுதியில் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த சந்தேக நபர் பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஆவார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணம் மோசடி செய்த வழக்கில், மராவில நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் இவரே என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபரை தொடர்பாக யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

