சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் மீது சோதனை ; இருவர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் மீது சோதனை ; இருவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்போலவத்த பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில், பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது விற்பனைக்காக தயாராக வைத்திருந்த 187.5 லீற்றர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மூணகம பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் ஹொரணை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுப்பத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில், 90 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 49 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )