
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (28) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது இரவு 11.30 மணிவரை அமுலில் இருக்கும்.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

