
ஆண்ட்ராய்டு போன்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்
Meta Platforms நிறுவனம், Android 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவை வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதன்படி, Android 5.0 மற்றும் 5.1 போன்ற பழைய பதிப்புகளில் இனி WhatsApp பயன்பாடு செயல்படாது. புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய இயங்குதளங்களும் ஹார்டுவேர்களும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால், இவ்வாறான மாற்றம் அவசியமானதாகும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இத்தொடர்பாக பாதிக்கப்படவுள்ள பயனர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயனர்கள் தங்கள் உரையாடல்கள், படங்கள் மற்றும் பிற தரவுகள் இழப்பைத் தவிர்க்க விரைவில் புதிய Android பதிப்புகளுக்கு மேம்படுத்திக்கொள்ள அல்லது புதிய சாதனங்களுக்கு மாறிக்கொள்ளுமாறு Meta Platforms அறிவுறுத்தியுள்ளது.

