
தங்கத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (08) ஒரு பவுணுக்கு 7,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் 398,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை, இன்றைய உயர்வுடன் 4 இலட்சம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,575 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

