
மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகள் ஒருவேளை உணவைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று கையளித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக அவர்கள் வழங்கியுள்ளனர்.
இந்த உலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டு பின்னர் அவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனால் கையளிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

