கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து : ஒருவர் பலி!

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடாவ குறுக்கு வீதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வீடொன்றின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தலவில பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )