இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஷம்மி சில்வா 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்பின் தொடர்ச்சியாக சுமார் ஏழு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.

இக்காலப்பகுதியில் அவரது நிர்வாகத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மேலும், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தை பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத் தரப்பு அறிவுறுத்தியதாகவும் அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில், ஒரு சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் குழுவும், வீரர்களின் முகாமையாளர் ஒருவரும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து தற்போதைய கிரிக்கெட் நிர்வாகம் குறித்து முறைப்பாடு அளித்திருந்த பின்னணியிலேயே இந்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )