காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி

கொஹும்பகஸ்தலாவ, மங்களகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மங்களகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மங்களகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின் படி, தனது வீட்டருகே வந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, குறித்த நபர் யானையால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மங்களகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )