இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி நடவடிக்கை ; நிர்வாகம் கைமாறியது

இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி நடவடிக்கை ; நிர்வாகம் கைமாறியது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாகப் பணிகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு ஏற்ப இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், கட்டமைப்பு மாற்றங்களை முன்னெடுக்கவும் ஒரு சிறப்பு குழு விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவின் ராஜினாமாவை விளையாட்டு அமைச்சர் இன்று (29) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கியமான மாற்ற கட்டம் ஆரம்பமாகியுள்ளது என விளையாட்டு துறையினர் குறிப்பிடுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )