கோதுமை மாவு விலை உயர்வு

கோதுமை மாவு விலை உயர்வு

ப்ரிமா நிறுவனம் இன்று (29) முதல் கோதுமை மாவு விலையை உயர்த்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ப்ரிமா மாவின் ஒரு கிலோவுக்கு ரூ.5 உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முன்பு ரூ.220 ஆக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது ரூ.225 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு பேக்கரி பொருட்கள் மற்றும் அன்றாட உணவுப் பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )