
ஹட்டன் – சாஞ்சிமலை பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ஹட்டன் – சாஞ்சிமலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட உடனேயே ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தோர் தொடர்பான விபரங்கள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
CATEGORIES Sri Lanka

