கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவின் மகன் கைது

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவின் மகன் கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவின் மகன் நேற்றிரவு (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்று தொடர்பான தகராறில் உரிமையாளரையும் அவரது மகளையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அரச அதிகாரிகள் குழுவுடன் குறித்த காணிக்கு சென்றபோது, ​​வீட்டு உரிமையாளரையும் அவரது மகளையும் மிரட்டியுள்ளார்.

அதன்படி, கைது செய்யப்பட்ட கித்சிறி ராஜபக்ஷ இன்று (29) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )